ஹைலைட்ஸ்:

  • நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் மரணம்
  • மனோகர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டெடி

கே.எஸ். ரவிகுமாரிடம் உதவியாளராக வேலை செய்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். கோலங்கள் படத்திற்கு வசனம் எழுதினார். மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்தார்.அஜித்தின் என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

நகுல், சுனைனா நடிப்பில் வெளியான மாசிலாமணி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் மனோகர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்தார். காஞ்சனா 3, கைதி, ஆர்யாவின் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் மனோகர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனோகர் இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மனோகரின் மறைவு செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது,

cheran

அன்பிற்கினிய நண்பரும் எழுத்தாளரும் இயக்குனருமான RNR மனோகர் இன்று இய்ற்கை எய்தி இருக்கிறர் . கனவுகளின் கரை தொடாமலே சென்றுவிட்டார்..
#RIPRNRManogar என்றார்.
எதிர்பார்க்காத என்னென்னமோ நடந்துடுச்சு: பட வாய்ப்பை இழந்த நயன்தாரா