ஹைலைட்ஸ்:

  • ரசிகர்கள் கொண்டாடும் அண்ணாத்த ட்ரெய்லர்
  • தீபாவளிக்கு ரிலீஸாகும் அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து சன் பிக்சர்ஸ் அவ்வப்போது ஏதாவது அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

அண்ணாத்த டீஸர் வெளியானது. மேலும் அண்ணாத்த டைட்டில் பாடல், சாரல் காற்றே, மருதாணி, வா சாமி ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகின.

அதை பார்த்த ரசிகர்களோ, ட்ரெய்லரை விடுங்க என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அண்ணாத்த ட்ரெய்லர் அக்டோபர் 27ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
அறிவித்தபடி சரியாக 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. பேரு காளையன், ஊரு சூரைக்கோட்டை, சுத்தி இருக்கிற எல்லா கிராமத்துக்கும் பிரசிடென்டு என்று ரஜினிக்கு அம்சமான அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் ரஜினி ஸ்டைலாக மட்டும் இல்லை மாஸா, குறும்பா, வேற லெவலில் இருக்கிறார்.

ரஜினி வில்லனின் மகனுக்கு உதவி செய்து மனதார வாழ்த்திய கமல்