ஹைலைட்ஸ்:

  • அண்ணாத்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது
  • ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி தான் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் ரஜினிக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.
அறிவித்தபடி பாடலை வெளியிட்டுள்ளனர். ரஜினி, எஸ்.பி.பி. கூட்டணி எப்பொழுதுமே வெற்றிக் கூட்டணி. அதற்கு இந்த பாடல் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

அண்ணாத்த அண்ணாத்த என்று எஸ்.பி.பி. பாடியிருக்கும் அந்த லிரிக்கல் வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

எஸ்.பி.பி. குரலை கேட்கும்போது ஏதோ செய்கிறது. இசை இருக்கும் வரை அவர் வாழ்வார் என்று தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட்டும், சூர்யா ரசிகர்கள் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டும் கேட்டுள்ளனர்.

முன்னதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டு நினைவு நாள் அன்று இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் ரசிகர்கள்.

கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலை இருக்கே: கமலை திட்டிய பிக் பாஸ் 5 போட்டியாளர்