ஹைலைட்ஸ்:

  • சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • சூர்யா 40 படத்தின் தலைப்பு எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தற்காலிகமாக சூர்யா 40 என்று அழைக்கப்பட்டது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

படம் குறித்து பாண்டிராஜ் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நாளை சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டார்கள்.

ஜுலை 23ம் தேதி தானே பிறந்தநாள், நாங்கள் ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கே சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் இன்று மாலை அப்டேட் வருகிறது என்பதை நினைவூட்ட சூர்யா புகைப்படத்துடன் ட்வீட் செய்தது சன் பிக்சர்ஸ். மேலும் அவ்வப்போது நினைவூட்டல் வீடியோக்களையும் வெளியிட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியிடாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர்.
ஒரு கையில் வாள், ஒரு கையில் துப்பாக்கியுடன் வந்து சம்பவம் செய்கிறார் சூர்யா. படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த வீடியோவை புது சாதனை படைக்க வைப்போம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பவர்ஸ்டாருடன் மணக்கோலத்தில் வனிதா: வைரல் போட்டோ