ஹைலைட்ஸ்:

  • இதமாக இருக்கும் இதுவும் கடந்து போகும் பாடல்
  • நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படம்
  • விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் நெற்றிக்கண். விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் அந்த படத்தில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்துள்ளார்.

நெற்றிக்கண் படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்கள் அன்பான இயக்குநரே என்று நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் இதுவும் கடந்து போகும் பாடல் ஜூன் 9ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அறிவித்தபடி பாடலை வெளியிட்டுள்ளனர். பாடலை கேட்ட ரசிகர்கள் அருமையாகவும், இதமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இருக்கும் கொரோனா பிரச்சனை எப்பொழுது தான் தீருமோ என்று மக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுவும் கடந்து போகும் என்கிற பாடல் பலருக்கும் ஆறுதலாக இருக்கிறது.

நெற்றிக்கண் படத்தை தயாரிப்பது தவிர்த்து நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி. இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளான நயன்தாராவும், சமந்தாவும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். நயன்தாராவுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்திலும், அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையிலும் நடந்தது.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமியாக மாறியதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார் நயன்தாரா. அவரும், ரஜினியும் சேர்ந்து வரும் காட்சிகள் கடந்த மாதம் படமாக்கப்பட்டது.

இதையடுத்து நயன்தாரா, மீனா வரும் காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க காத்திருக்கிறார்கள்.

செய்யவே கூடாது என்று இருந்த காரியத்தை செய்ய வைத்துவிட்டார் கார்த்திக்: தனுஷ்