நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் அனுஷ்காவை வைத்து ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெற்றிக்கண்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா கண் பார்வையில்லாதவராக நடித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாராவின் நடிப்பை பாராட்டினார்கள். ஆனால் படம் ஜவ்வாக இழுப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார்களாம்.

அனுஷ்கா

நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் நடிகரும், இயக்குநருமான ஆதிவி சேஷ். நயன்தாராவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வேண்டாம்

நயன்தாராவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். உங்கள் நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நெற்றிக்கண் ரீமேக் வேண்டாம். நயன்தாராவின் கதாபாத்திரம் கெத்து தான். ஆனால் படம் ஜவ்வு என்று எச்சரித்துள்ளனர்.

புதுப்படங்கள்

சைலன்ஸ் படம் படுதோல்வி அடைந்த பிறகு அனுஷ்கா புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. கதைகள் கேட்டு வருகிறாராம். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.