ஹைலைட்ஸ்:

  • ஒரு வழியாக ரிலீஸான மாநாடு
  • மாநாடு ட்விட்டர் விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டியது. ஆனால் ரிலீஸை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி மாநாடு ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்றிரவு அறிவித்தார். அதன் பிறகு பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து ஒரு வழியாக மாநாடு படத்தை இன்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

கேடிஎம் பிரச்சனையால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணிக்கு தான் மாநாடு படத்தின் முதல் காட்சியே திரையிடப்பட்டுள்ளது. சில இடங்களில் 8.30 மணிக்கு தான் முதல் காட்சி. இந்நிலையில் மாநாடு படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படம் ரிலீஸானதே ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கிறது.
அப்துல் காலிக் சிலம்பரசனின் என்ட்ரி வெறித்தனமாக இருக்கிறது. லவ் யூ தலைவா…படம் வருமா, வராதா என்கிற கவலையில் இருந்த ரசிகர்கள் டைட்டில் கார்டை பார்த்தே திருப்தி அடைந்துவிட்டார்கள்.

எஸ்.டி.ஆர். திரும்பி வந்துட்டாரு.

சிம்பு அறிமுக காட்சி சிறப்பு. யுவனின் பிஜிஎம்முடன் என்ட்ரி தீயாக இருக்கிறது. தலைவனின் லுக்ஸ், ஸ்டைல், சிரிப்பு அருமை.
Time loopதானனு எதிர்பார்த்து போறவங்களுக்கே பெரிய சர்பிரைஸ் இருக்கு. வேற லெவல் திரைக்கதை. எஸ்.டி.ஆர். தான் அனைவரையும் கவர்கிறார். மங்காத்தா அளவுக்கு இருக்கிறது. யுவனின் பிஜிஎம் தீயாக உள்ளது. சிலபல குறைகள் இருந்தாலும் சூப்பர் ஹிட் மெட்டீரியல். ரசிகர்கள் மீண்டும் வந்து படம் பார்ப்பது உறுதி. #Maanaadu #Simbu #சிம்பு என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியே வந்த யாஷிகா: வைரல் வீடியோ