நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே மராத்தி நடிகை கிராந்தி ரேத்கரின் கணவர் ஆவார்.

ஆர்யன் கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். ஆர்யன் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அக்டோபர் 7ம் தேதி வரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் போதை வழக்கில் கைதானதால் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்யன் கானை பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. அவரை சிங்கம் போலீஸ் என்று இந்தி மீடியாக்கள் கொண்டாடுகின்றன.

சமீர் வாங்கடே

ஆர்யன் கானை பிடித்த சமீர் வாங்கடே பிரபல மராத்தி நடிகை கிராந்தி ரேத்கரின் கணவர் ஆவார். தன் கணவரை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக கிராந்தி பேட்டி அளித்துள்ளார். கிராந்தி மேலும் கூறியதாவது, எங்களின் இரட்டை பிள்ளைகளுக்கு 3 வயது ஆகிறது. சமீர் நாட்டுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பார். அவரை குழந்தைகள் மிஸ் பண்ணுகிறார்கள் என்றார்.

பெருமை

குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று அவருக்கு தெரியும். அதனால் அவர் தன் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு நாட்டுக்காக சேவை செய்வதை பார்க்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் வீட்டை கவனித்துக் கொள்வதால் அவர் தன் வேலையை நிம்மதியாக செய்கிறார் என்கிறார் கிராந்தி.