Memes
oi-Jaya Chitra
சென்னை: மே மாதம் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விடும் என மாணவர்கள் குஷியாக இருக்க, வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் வெயிலைப் பற்றிய கவலையில் மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர்.

ஓவர் மழையாக இருந்தாலும் சரி, சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் சரி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வந்து விடும். ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் இருக்கிறார்களே.. அவர்களது நிலைதான் பாவம். எப்படிப்பட்ட சூழலிலும் வேலைக்குச் சென்றால்தான் வருமானம் என்பதால், வெயிலோ, மழையோ எப்படியாவது வேலைக்குச் சென்று விடுவார்கள்.

ஆனால், ‘நாங்கள் மட்டும் பாவமில்லையா.. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது மாதிரி எங்களுக்கும் ஏதாவது விடுமுறை விட்டால் தேவலை’ என பாவம் அவர்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு, சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.

இன்னமும் அக்னி நட்சத்திரமே ஆரம்பிக்காத நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அக்னி நட்சத்திரமும் ஆரம்பித்து விட்டால், வெளியில் வெயிலில் தலை காட்ட முடியாது. அதனால்தான் இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

இதோ அவர்களது ஜாலி புலம்பல்கள்.. சாரி, மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…


English abstract
Those are some jolly memes assortment on summer season warmth.
Tale first revealed: Wednesday, April 27, 2022, 18:10 [IST]