ஹைலைட்ஸ்:

  • காதலருடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் ஸ்ருதி
  • சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார்.

மும்பையில் இருக்கும் தன் வீட்டில் சாந்தனுவுடன் லிவ் இன் முறைப்படி வசித்து வருகிறார் ஸ்ருதி. இந்நிலையில் ஸ்ருதியும், சாந்தனுவும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் பிரியவில்லை.

தானும், சாந்தனுவும் சேர்ந்து ஒர்க்அவுட் செய்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அதில் ஸ்ருதி மீது அமர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறார் சாந்தனு.

வீடியோவில் ஸ்ருதி ஹாசன் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாந்தனுவின் தலைமுடியின் நிறத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்கள்.

கெரியரை பொறுத்தவரை கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி. அவரும், பிரபாஸும் முதல்முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதிக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் பிரபாஸ்.

முன்னதாக எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஸ்ருதி நடித்த லாபம் படம் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை.

Thalapathy 66: விஜய் மகளாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு?

பாலிவுட்டில் பேசுபொருளான நடிகர் ஷாருக்கான் மகன் கைது!