நகைச்சுவை மற்றும் குணச்சிததிர வேடங்களில் நடித்துவரும் காளிவெங்கட் முதல்முறையாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். சினிமாவில் சிறுசிறு வேடங்களில் தோன்றி தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு மாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

கலகலப்பு, உதயம் என்ஹெச் 4, தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, கொடி போன்ற படங்கள் காளி வெங்கட்டுக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தன. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படங்களிலும் நடித்திருந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிவரும் சார்பட்டா பரம்பரையிலும் காளி வெங்கட் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாடு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகிறார் காளி வெங்கட். புதுமுக இயக்குனர் பிரம்மா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் காளி வெங்கட் ஜோடியாக ரித்விகா நாயகி நடித்துள்ளார். பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகு எதிர்பார்த்த அளவிற்கு ரித்விகாவிக்கு நாயகி வேடம் அமையவில்லை. இந்நிலையில் அவருக்கு காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 1 கோடி அளித்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர்!
ஆனால், முன்னதாக காளி வெங்கட்டிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளார் சாய்பல்லவி. அதன்பிறகு தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாய்பல்லவியை தேடி வந்துள்ளது.

அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை தயாரித்த விஜி சுப்ரமணியம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். படத்தின் பூஜை, படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.