மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறவர் அந்த வாரிசு நடிகை. நடிப்பதுடன் நன்றாக பாடவும் செய்வார். இந்நிலையில் நடிகையை தேடி ஒரு பெரிய பட வாய்ப்பு வந்திருக்கிறது.

படத்தை இயக்குபவர் நடிகையை வைத்து ஏற்கனவே ஹிட் கொடுத்தவர். அதனால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால் ஹீரோவோ சூப்பர் சீனியர்.

வயதான அந்த ஹீரோவுடன் நடிக்க மறுத்து பிற நடிகைகள் எல்லாம் தெறித்து ஓடுகிறார்கள். இந்நிலையில் தான் நடிகை அவருடன் சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இயக்குநருக்காக ஓகே சொல்லிவிட்டாலும், நடிகைக்கும் அந்த சீனியர் ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லையாம். முடியாது என்று சொன்னால் இயக்குநர் வருத்தப்படுவாரே, மேலும் அந்த ஹீரோவும் பிரச்சனை பண்ணுவாரே, என்ன செய்வது என்று நடிகை குழப்பத்தில் இருக்கிறாராம்.

தற்போது தான் அவர் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் உயர்ந்த நடிகருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் மூத்த நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கெரியர் அடிவாங்கிவிடும் என்று நடிகை பயப்படுகிறாராம். நோ சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.