கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது அடுத்த அவதாரத்திற்கு தயாராகிவிட்டார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வல், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான படம் ‘கோமாளி’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கோமாளி’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடைய படங்களை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்திகள் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தனதுமுதல் படத்திலேயே முத்திரை பதித்த பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது அடுத்த படைப்பாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஹீரோ அவதாரமும் எடுக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

வாங்குற சம்பளம் எல்லாம் கடனை அடைக்கவே சரியா இருக்கு – விஜய் சேதுபதி!
இவர் ‘கோமாளி’ படத்திலே ஆட்டோ டிரைவராக ஒரு சின்ன காட்சியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடேயப்பா..! ஸ்ரீதேவி மகளா இவங்க.! குஷிகபூர்