தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்து ஜப்பானை நிலைகுலைய வைத்தது. ஹர்மன்பிரீத் சிங் 10 மற்றும் 53 நிமிடம், தில்பிரீத் சிங் 23-வது நிமிடம், ஜெரம்பிரீத் சிங் 34-வது நிமிடம், சுமித் 46-வது நிமிடம், ஷம்ஷிர் சிங் 54-வது நிமிடம் ஆகிய இந்திய வீரர்கள் கோல் போட்டனர். ஜப்பானால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை ஊதித்தள்ளியது.
முதல் 10 நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் இந்தியாவினால் கோல் அடிக்க முடியவில்லை, ஜப்பானும் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நழுவ விட்டது. ஜப்பான் ஸ்ட்ரைக்கர் வாய்ப்பை வைடாக அடித்தார். தொடர்ந்து அட்டாக் செய்த இந்திய அணி ஹர்திக் சிங்கின் அபார பாஸ் மூலம் ஹர்மன்பிரீத்தின் கோலாக மாறியது. 23வது நிமிடத்தில் இந்திய அணியின் அட்டாக்கிங் கூட்டணி மந்தீப் சிங், ஷிலந்த் லக்ரா, தில்பிரீத் சேர்ந்து பந்தை அபாரமாக நகர்த்த தில்பிரீத் கோலாக மாற்றினார். இந்தியா 2-0. தொடர்ந்து அட்டாக்கிங் ஹாக்கி ஆடிய இந்திய அணி 6-0 என்று வென்றது.
ஜப்பானுக்கு இடைவேளைக்குப் பிறகு கிடைத்த கோல் வாய்ப்பை இந்திய இளம் கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா அருமையாகத் தடுத்தார்.
ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். தனது தொடக்க லீக்கில் தென்கொரியாவுடன் ‘டிரா’ கண்ட இந்திய அணி அதன் பிறகு வங்கதேசம், பாகிஸ்தானை பந்தாடியது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணியை 9-0 என்ற கோல் மழையில் நசுக்கிய இந்திய அணி பாகிஸ்தானையும் பிறகு காலி செய்தது.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. 4 ஆட்டங்களிலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.
நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் தென்கொரியா- பாகிஸ்தான், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
Practice @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Practice @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube