Motivational Tales
oi-G Uma
இன்று பொங்கல்.. நாளை மாட்டுப் பொங்கல்.. உழவர்களும் தமிழர்களும் உற்சாகமாக கொண்டாடும் பெருநாள்தான் இந்த பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் அன்பை விதைப்போம்.. அன்பையே அறுவடையும் செய்வோம்.
அன்பால் சூழ்ந்த உலகம் இது. அன்பால் அனைவரையும் உங்கள் வசமாக்க முடியும். வீட்டைச் சுத்தம் செய்து வண்ணக்கோலமிட்டு வீட்டை அலங்கரித்து புதப் பானை வாங்கி மஞ்சள் கொத்துக் கட்டி பொங்கல் செய்து இறைவனை வழிபடுவோம். அன்று உங்கள் உறவினர்கள் சுற்றத்தாரோடு சேர்ந்து பொங்கல் வைத்து உங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

பாரம்பரிய விளையாட்டுகளை பொங்கல் தினத்தன்று உங்கள் நண்பர்களோடு கொண்டாடி மகிழுங்கள். உறவினர்களோடு பலகதைகள் பேசி மகிழுங்கள். அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து சாப்பிடும் சுகமே தனி தான். என்ன தான் தொழிலுக்காக வெளியூர் வந்தாலும் பொங்கல் அன்று சொந்த ஊருக்குச் சென்று விடுவர்.
தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
சொந்த பந்தங்களோடு வீட்டு வாசலில் சூரிய பகவானை எண்ணி அரிசியும் வெல்லமும் சேர்த்துப் பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றுஅனைவரும் சேர்ந்து கூறும் போது அதன் மகிழ்ச்சி அலாதியானது.
உறவுகள் கூடி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குத்தான் பண்டிகைகள். எல்லா உறவுகளையும் சந்தித்து மகிழ்ச்சியாகப் பேசுங்கள். அன்பு பொங்குவதால் உறவுகளிடையே நெருக்கம் அதிகமாகும். இந்தப் பொங்கலில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து அனைவரும் சுற்றமும் நட்பும் சூழ பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.
English abstract
Allow us to Rejoice the Pongal with conventional fervour.
Tale first printed: Thursday, January 14, 2021, 15:29 [IST]