தென் கொரியாவுடன் 2-2 என்று டிரா செய்த இந்திய அணி வங்கதேசத்தை 9-0 என்ற கோல்கணக்கில் நசுக்கி, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி, ஜப்பானை 6-0 என்ற கோல் மழையில் ஊதி அரையிறுதியில் இன்று ஜப்பானை சந்திக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு இந்த அரைஇறுதி ஆட்டம் நடைபெறும்.
இந்த போட்டி தொடரில் ஜப்பான் அணி, வங்காளதேசத்தை மட்டுமே தோற்கடித்தது. பாகிஸ்தான், தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டங்களில் டிரா செய்தது. இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஒரு கோல் கூட திருப்ப முடியாமல் சரண் அடைந்தது ஜப்பான் அணி.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மோதுகின்றன. ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் 2 கோல்களை அடிக்க மற்ற 4 வீரர்களும் கோல் அடித்தனர். ஹர்மன் பிரீத் சிங் ஜப்பானுடனான அரையிறுதி பற்றி கூறுகையில், “ஒலிம்பிக் வெண்கல வெற்றிக்குப் பிறகு இந்தத் தொடருக்கு வந்திருக்கிறோம். போட்டிகள் எளிதாக இருக்கும் என்ற எண்ணமில்லை, ஜப்பான் அணி அபாயகரமான அணி அதனால் எளிதாக எடுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
Also Read: India vs South Africa| சிஷ்யன் விராட் கோலிக்கு பேட்டிங் பாடம் எடுத்த குரு ராகுல் திராவிட்
இந்தத் தொடரில் ஹர்மன்பீரித் சிங் 6 கோல்களை அடித்துள்ளார். தில்பிரீத் சிங் 4 கோல்கள், கொரியாவின் ஜாங் ஜோங்யுன் 4 கோல்கள் அடித்துள்ளனர். இன்று நடைபெறும் 2 செமிபைனலையுமே நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் செலக்ட் 2 சேனல்களில் ஒளிபரப்புகின்றன.பாகிஸ்தான் -தென் கொரியா லைவ் மதியம் 3.30 மணி.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா லைவ் மாலை 6:00 மணி.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube