விராட் கோலியின் கேப்டன்ஷிப் விவகாரம் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் கருத்துக்களால் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. சமீபத்தில் ஊடகங்களுக்கு கங்குலி அளித்த பேட்டியில், டி20 கேப்டன்ஷிப்பில் இருந்து விலக வேண்டாம் என கோலியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். ஆனால் தன்னிடம் யாரும் எதுவும் பேசவில்லை, கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்படுவதே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் தான் எனக்கு தெரியும் என கோலி தெரிவித்தார்.
Learn Extra: ஜோக்காகச் சொன்னது விபரீதமானது: சர்ச்சையில் சிக்கிய கங்குலி
அதே நேரத்தில் கோலியின் கேப்டன்ஷிப் நீக்கம் குறித்து சவுரவ் கங்குலி விளக்கமும் அளித்தார். அதில் இரண்டு வடிவ கிரிக்கெட்டுக்கும் தனித்தனி கேப்டன்கள் இருப்பது நன்மையை தரும் என கூறினார்.கோலி கேப்டன்ஷிப் விவகாரத்தில், சவுரவ் கங்குலியை சாடி முன்னாள் தேர்வுக் குழு தலைவர் வெங்சர்கர் பேசியிருக்கிறார்.
“இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும் துரதிர்ஷ்டவசமானது. கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்னையை பக்குவமாக அணுகியிருக்க வேண்டும். தேர்வுக்குழுவின் சார்பாக கங்குலி பேசவேண்டிய அவசியமே கிடையாது. கங்குலி பிசிசிஐ தலைவர். அணியின் தேர்வு மற்றும் கேப்டன்சி விவகாரங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அது குறித்து தேர்வுக் குழுவின் தலைவர் தான் பேச வேண்டும்.
Learn Extra: அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை – ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்
ஒரு கேப்டனை பதவியில் இருந்து நீக்குவது கேப்டனுக்கும், தேர்வுக் குழுவுக்கும் இடையிலான விவகாரம். அது கங்குலியின் எல்லைக்குள் வராது. இந்த நிலைமை மாற வேண்டும். கோலியை அனைவரும் மதிக்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்காகவும் அதிகமாக பங்காற்றியிருக்கிறார். பிசிசிஐயின் பக்குவமற்ற செயல்பாட்டினால் நிச்சயம் கோலி பாதிக்கப்பட்டிருப்பார். ” இவ்வாறு வெங்சர்கர் தெரிவித்தார்.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube