சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து வந்துள்ள முதல் ஞாயிறு என்பதால் சமூகவலைதளங்களில் அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. புரட்டாசி மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு கட்டி வைத்திருந்த நாக்கிற்கு இன்று நல்ல விருந்து கொடுத்து வருகின்றனர் அசைவப் பிரியர்கள். வீட்டு சமையலறையில் மட்டுமல்ல, சமூகவலைதளப் பக்கங்களிலும் மசாலா மணம் கமகமக்கிறது ஸ்டேட்டஸ்களாக.