Motivational Tales
oi-G Uma
இது காதல் காலம்.. ஆம் காதல் மாதமும் கூட.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று பாடித் திரிகிறார்கள் காதலர்கள்… இந்திரலோகத்து சுந்தரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே என்று சிலாகித்துப் பாடும் பாடல்கள் ஓடிக் கொண்டுள்ளன எங்கெங்கும்.
காதல்.. அது ஒரு மாஜிக்.. பலருக்கு காதல்தான் சுவாசமே.. காதலின் வாசம்தான் அவர்களை உயிர்ப்போடு இயங்க வைக்கிறது.. காதல் இல்லாத உயிரை எங்கேனும் பூமியில் பார்க்க முடியாது.. விலங்குகளிடமும் உண்டு காதல்.. மனிதர்களிடமும் உண்டு காதல்.. ஏன் தெய்வங்களுமே கூட காதலில் மூழ்காதவை உண்டா.. முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விட உயர்ந்த காதல் ஏதேனும் இருக்க முடியுமா!
இரு மனம் இணைந்து இருப்பது தான் காதல். காதல் சுகமானது. பார்த்தவுடன் காதல் பார்க்காமல் காதல் இப்படி எத்தனையோ வகைகள் காதலில் இருக்கின்றன. காதலுக்கு வயதில்லை காதல் வந்தவுடன் தூக்கம் காணாமல் போய் விடும். செய்யும் செயல்கள் அனைத்திலும் நம் மனம் லயிக்காது காதல் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும்.
கண்ணே கணியமுதே உன்னைப் போல் ஒருவனைப் பார்த்தது இல்லை என்று பெண்கள் கூறுவதும் தேவதையே என் வாழ்நாள் முழுவதும் உன்னோடு நான் வாழ ஆசைப்படுகிறேன் என்று ஆண்கள் கூறுவதும் காதலின் வெளிப்பாடு தான். காதலின் சின்னமாக விளங்குவது ரோஜா மலர் தான். ரோஜாவைக் கையில் ஏந்தி தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் போது மனம் அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆவலோடு அவள் முகத்தைப் பார்த்து காதலுக்குச் சம்மதம் எனும் போது மனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும்.
எல்லா உயிர்களிடத்திலும் காதல் இருக்கிறது. ஆழமான அன்பின் வெளிப்பாடே காதல். கண்ணே உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே நீயும் நானும் காதலால் கசிந்துருக வேண்டும் என்று கான மழை பாடுங்கள். கவிதை பாடுங்கள் உங்கள் காதலுக்காக.
English abstract
Poems are galoring in every single place as fans day nearing on Feb 14th.