Motivational Tales
oi-G Uma
கனவு காணுங்கள்.. அது உங்களது நிழல்களை நிஜமாக்கும் என்பார்கள். உண்மைதான், அறிஞர் அப்துல் கலாமே அதைத்தானே நமக்குச் சொன்னார். கனவுகளின் அழகுதான் நமது எதிர்காலம்.. கனவு கண்டால்தான் நாம் இலக்குகளை நோக்கி எளிதாக நடை போட முடியும்.
நம் மனதில் எழும் ஆசைகள் தான் நமக்குக் கனவாக மாறுகிறது. மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஒரு கனவு உண்டு. நான் அம்பானியாவேன் நான் டாக்டராவேன் நான் விஞ்ஞானியாவேன் ஓவியராவேன் எழுத்தாளராவேன் இப்படி எத்தனை எத்தனை கனவுகள்.நம் கனவுகள் தான் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.
நம கனவுகளை நனவாக்குவதன் மூலம் நம் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவுகிறது. நம் லட்சியப் பாதையை நிர்ணயிப்பதே நம் கனவு தான் அதனால் தான் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். சிறுவயதில் நாம் காணும் கனவு தான் நம் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறது.
கனவுகளை நோக்கிப் பயணியுங்கள். கடினமான உழைப்பே உங்கள் கனவுகளை நனவாக்குகிறது. முறையான பயிற்சியும் சிறந்த திட்டமிடலும் தான் வெற்றியின் ரகசியம். நிழல்களை நிஜமாக்கும் வித்தை உங்களிடம் தான் உள்ளது. உங்கள் கனவுகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் வெற்றி நடை போடுங்கள்.
இலக்குகளை எளிமையாக்குங்கள்.. ஈஸியாக வெல்லலாம்
சிறுவயதிலேயே உங்கள் குழந்தைகளைக் கனவு காணச் சொல்லுங்கள். அவர்களின் கனவை நனவாக்க அவர்களுக்கு உதவுங்கள். எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் கவலைப்படாமல் கனவுகளை நோக்கிப் பயணியுங்கள்.
கனவு காணுங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும்.
English abstract
You’ll Are living your long term in goals.
Tale first printed: Monday, December 7, 2020, 13:29 [IST]