Motivational Tales
oi-Mohana Priya S
தமெரிக்கா டிவி, தில்லி கலை இலக்கியப் பேரவை, டோக்கியோ தமிழ்ச் சங்கம், மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், தபம்ஸ் குழுமம் ஆகியன இணைந்து பிப்ரவரி 13 ம் தேதி காதலர் தின விழா 2021 ஐ கொண்டாட திட்டமிட்டுள்ளன.
இவ்விழாவில் பன்னாட்டு சிறப்பு பேச்சாளர்கள் பங்குபெறும் பட்டிமன்றம், இணையவழியில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு, ஜூம் செயலி வழியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
காதல் மகிழ்ச்சியா…மாயையா என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராக அண்ணா சிங்காரவேலு செயல்பட உள்ளார். காதல் மகிழ்ச்சியே என்ற தலைப்பில் டோக்கியோவில் இருந்து அசோக், அமெரிக்காவில் இருந்து விஜிராஜா, இந்தியாவின் திருவாரூரில் இருந்து சினேகா ஆகியோர் பேச உள்ளனர்.
காதல் மாயையே என்ற தலைப்பில் நியூசிலாந்தில் இருந்து நித்யா சுரேஷ், துபாயில் இருந்து சசி எஸ்.குமார், மலேசியாவில் இருந்து த.மகாதேவன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை திரைப்பட பாடகர் வேல்முருகன் தொடங்கி வைக்க உள்ளார். ஆஸ்திரேலியா மெல்பர்ன் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தரேசன் நடேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தூர்தர்ஷன் நிலைய நிகழ்ச்சி தலைவரும், எழுத்தாளருமான கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
தமேரிக்கா டிவி நிறுவனர் மகேஷ் நாட்டாண்மை வரவேற்புரை வழங்க, டோக்கியோ தமிழ்ச் சங்க நிறுவன தலைவர் கணேசன் ஹரி நாராயணன் தொடக்கவுரை நிகழ்த்த உள்ளனர். தபம்ஸ் குழுமம் நிறுவனர் முனைவர் பா.மேகநாதன், பெங்களூரு ர.தேன்மொழி நெறியாள்கை செய்ய உள்ளனர்.
தில்லி கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பா.குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளார். சென்னையை சேர்ந்த ரெயின்போ இவன்ட் மணி மஞ்சு குழுவினர் இசைவிருந்து படைக்க உள்ளனர்.
ஆஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி நிறவனர் பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை புரவலர் கே.வி.கே.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தில்லி கலை இலக்கியப் பேரவை தலைவர் ப.அறிவழகன் நன்றியுரை வழங்க உள்ளார்.
English abstract
Valentein’s Day particular Pattimandram will habits thru webminar on February 13 th