Motivational Tales
oi-G Uma
இப்போதெல்லாம் குக்கர் பொங்கல்தான்.. கூட்டமே இல்லாமல் சொந்த பந்தம் இல்லாமல் குடும்பத்துக்குள் முடிந்து விடுகின்றன பட்டணத்து பொங்கல் விழாக்கள்.
ஆனால் கிராமங்களைப் பாருங்கள். உறவுகள் கூடி நட்புகள் கூடி ஊர் கூடி பொது இடத்தில் பொங்கல் வைத்து பல்வேறு விளையாட்டுகள் விளையாடி உற்சாகமாக கொண்டாடுகின்றனர் நம் பாரம்பரிய விழாவை.
அதுதாங்க உண்மையான பொங்கல். அந்த சுவையும், இன்பமும் வேறு எதிலாவது கிடைக்குமா சொல்லுங்க.
வித்தியாசமாக செய்த விஜயபாஸ்கர்.. வழங்கிய பொங்கல் பரிசு.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்!
கொண்டாட்டம்
பொங்கல் வருகிறது என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். புதிய மண்பானை வாங்கி அலங்கரித்து பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடித்து பொங்கலன்று காலையில் வீட்டு வாசலில் சூரிய பகவான் எதிரில் மண்பானையில் பொங்கல் வைப்போம்.
புத்தரிசியில் பொங்கல்
அரிசியும் வெல்லமும் சேர்த்துப் பொங்கலிட்டு இறைவனை குடும்பத்தோடு வழிபடுவோம். ஆனால் இன்றோ குக்கரில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து வீட்டிற்குள்ளேயே இருந்து விடுகிறோம். மண்பானையில் பொங்கல் செய்து அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானது.
தனி சுவை
பொங்கல் அன்று மண்பானையில் பொங்கலிட்டுப் பாருங்கள் அதன் சுவையே தனி தான். இன்று நாம் பயன்படுத்தும் குக்கரில் அந்த சுவை வராது. நம் சுற்றத்தாரோடு சேர்ந்து மண் பானையில் பொங்கல் செய்து அனைவரும் ஒன்று கூடி சூரியபகவானை வழிபட்டு நன்மை பெறுங்கள். மனசும் ஆத்மாவும் சேர்ந்து சந்தோஷிக்கும்.
தொழுதுண்டு பின் செல்பவர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பதற்கேற்ப ஊருக்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களைப் போற்றும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து உங்கள் அண்டை வீட்டாருடன் கொண்டாடி மகிழுங்கள்.
English abstract
Steer clear of cookers and Allow us to rejoice the Pongal with mut cooking.
Tale first printed: Tuesday, January 12, 2021, 11:40 [IST]