கங்குலி விவகாரம் என்னவெனில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கங்குலி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கங்குலியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றனர். உங்களுக்கு எந்த வீரரின் அணுகுமுறை ரொம்ப பிடிக்கும்? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி என பதிலளித்த கங்குலி கோலியின் அணுகுமுறை எனக்கு பிடிக்கும். ஆனாலும் அவர் அதிகமாக சண்டையிடுகிறார் என பேசியிருந்தார்.
அதே நிகழ்ச்சியில் கங்குலியிடம் இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதாவது, ‘வாழ்வில் மன அழுத்தங்களை எப்படி கையாள்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு ‘வாழ்வில் மன அழுத்தங்கள் என்று எதுவும் இல்லை மனைவியையும், தோழியும்தான் மன அழுத்தங்களைத் தருகிறார்கள் என பேசியிருந்தார். இந்த பதில்தான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது மனைவி, தோழி போன்ற பெண்களால்தான் மன அழுத்தங்கள் ஏற்படுகிறது என்று ஒரு எளிமையான தருணத்தில் ஜோக்காகவே கங்குலி சொல்கிறார்.
நம்மூர் பட்டிமன்றங்களில் இதைவிடவும் மோசமாக மனைவிகளைப் பற்றி கருத்துக் கூறுபவர்களைப் பார்க்கிறோம் ஆனால் அதே பட்டிமன்றத்திலேயே அந்தக் கருத்துகளுக்குப் பதிலடி கிடைப்பதையும் பார்த்திருக்கிறோம்.
சவுரவ் கங்குலி இப்படிச் சிக்குவது இது முதல் முறையல்ல, முன்பு ஒருமுறை ‘உங்கள் மகள் கிரிக்கெட் ஆட ஆசைப்பட்டால் உங்கள் பதில் என்ன?’ என்று கேட்டபோது, கங்குலி, “நான் ஆடக்கூடாது என்றே கூறுவேன், காரணம் பெண்களுக்கு கிரிக்கெட் தேவையில்லை’என்று கூறி வாங்கிக் கட்டிக் கொண்டார். .ஆனால் இந்த முறை ஜோக்காகத்தான் சொன்னார், ஆனாலும் சிக்கினார்.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube