Jokes
oi-Jaya
சென்னை: சர்தார்ஜி ஜோக் போல சமூக வலைத்தளங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜோக் வைரலாகி வருகிறது. படிங்க… சிரிங்க மக்களே… கமெண்ட்ல நீங்களும் செல்லூர் ராஜூ ஜோக் அனுப்புங்க.
வங்கி மேனேஜர் vs செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ அரக்க பரக்க வங்கிக்கு ஓடி வருகிறார்.
செல்லூர் ராஜூ: சார்… சார்… என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.
மேனேஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.
செல்லூர் ராஜூ: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக் லீப்லையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.
நீதிபதி vs செல்லூர் ராஜூ
ஜட்ஜ்: ஆர்டர்…
ஆர்டர்.. .ஆர்டர்…
செல்லூர் ராஜூ : ஒரு பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்ஸ்.
ஜட்ஜ் : ஷட் அப்.
செல்லூர் ராஜூ: இல்ல…இல்ல… எனக்கு செவன் அப் வேணும்.
ஜட்ஜ்: ????
English abstract
TamilNadu Minister Sellore Raju jokes Troll in Social media.