Motivational Tales
oi-G Uma
சென்னை: நிறையப் பேர் வள வளன்னு பேசிட்டே இருப்பாங்க.. ஒரு காரியமும் நடக்காது. அப்படிப்பட்டவர்கள் முதலில் பேச்சை நிறுத்தி விட்டு செயலில் இறங்கணும். தைரியமாக காரியத்தில் இறங்கினால்தான் மனசு நிறைய இருக்கும் ஆசை தீரும்.. வெற்றியும் கை கூடும்.. திருப்தியும் கிடைக்கும்.
நான் இந்த காரியத்தை கச்சிதமாகச் செய்து முடிப்பேன் என்று கூறுவதை விட அச்செயலைச் செய்து விட்டுக் கூறுபவருக்கே வெற்றி கைகூடும். வெற்று வார்த்தைகளைக் காட்டிலும் செயலில் காட்டுங்கள் உங்கள் திறமைகளை.
உங்களுடைய செயலில் வெற்றி அடைய வேண்டுமென்றால் அதற்கான முயற்சியில் முழுவேகத்துடன் செயல்பட வேண்டும். முயற்சி செய்வேன் வெற்றிப் பெறுவேன் என்று கூறாமல் அதை நிரூபித்துக் காட்டுவதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது.
பேசுவதை நிறுத்திவிட்டு செயல்களில் உங்கள் திறமைகளைக் காட்டி வெற்றி வாகைச் சூடுங்கள்.எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை நிறைவேற்ற அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் என்று பாடாமல் செயலில் செய்து காட்டுங்கள்.
எவனொருவன் தன் லட்சியத்தை திறம்பட செய்து முடிக்கிறானோ அவனே வாழ்வில் வெற்றியடைகிறான். வார்த்தைகளில் காட்டும் வர்ணஜாலத்தை உங்கள் செயலிலும் காட்டுங்கள். வாழ்க்கையின் வெற்றிக்கனிகளைச் சுவைக்க முயற்சி அவசியம்.
உங்களுடைய வாழ்க்கையும் வண்ணங்களால் ஜொலிக்க வேண்டுமென்றால் உங்கள் இலக்கைப் பற்றிப் பேசியே நேரத்தை வீணாக்காமல் இலக்கை நோக்கிப் பயணியுங்கள். நிச்சயம் வாழ்வில் வெற்றி மட்டுமல்ல வசந்தமும் வீசட்டும்.
English abstract
We wish to communicate much less and do extra to achive our objectives.
Tale first revealed: Tuesday, November 24, 2020, 11:40 [IST]