சென்னை: சிறியவர்களாகட்டும், பெரியவர்களாகட்டும் எல்லோருக்கும் பிடித்தமான பண்டிகை தீபாவளி தான். பட்டாசு வெடிக்கலாம், புதுத்துணி கட்டலாம், பட்சணம் சாப்பிடலாம் என அதற்கு எத்தனையோ காரணங்கள்.
இதனாலேயே எப்போது தீபாவளி வரும் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பே என்ன உடை வாங்குவது, என்னென்னெ பட்சணம் செய்வது என திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். தீபாவளிக்கு இன்னமும் பத்து நாள், ஒரு வாரம், நாலு நாள், நாளைக்கு என கவுண்ட் டவுன் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருக்கும்.
இப்படி பெருத்த எதிர்பார்ப்புடன் தொடங்கும் தீபாவளி முடிந்தவுடன், ‘சே.. இப்டி டக்குனு முடிஞ்சிடுச்சே..’ என்ற ஆதங்கமும் தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால் தீபாவளி முடிந்தால் என்ன அடுத்து கார்த்திகை இருக்கு பட்டாசு வெடிக்க என நம்பிக்கை தருகிறது மீம்ஸ்கள். கூடவே தீபாவளி செலவுகளைப் பற்றியும் கலாய்க்க தவறவில்லை.
இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு…