Motivational Tales
oi-G Uma
நாமளும் மகிழ்ச்சியா இருக்கணும்.. மற்றவர்களையும் மகிழ்விக்கணும்.. இதுதாங்க வாழ்க்கையின் முக்கிய அம்சமே.. எத்தனை பேர் இதைச் செய்கிறோம்.. நிச்சயம் பலர் இதைச் செய்வதே இல்லை. உண்மையில் இதுதான் இப்போது அனைவருக்குமே தேவைப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் அவசரகதியில் அலுவலகம் கிளம்பி மாலை வீடு திரும்பும் வரை டென்ஷன் தான். அதுவும் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலர் இரவு நேரங்களிலும் வேலை செய்கின்றனர். ஓடி ஓடி உழைக்கணும் அதே சமயம் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டு்ம்.

வாரம் ஒரு முறையாவது உங்கள் குடும்பத்தாரோடு பேசி மகிழ்ந்து ஒன்றாக அமர்ந்து பல கதைகள் பேசி உண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழுங்கள். தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது உங்களுக்காகச் செலவிடுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். பாட்டுப் பாடலாம் ஆட்டம் ஆடலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் மன அமைதியோடு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
2021 தீர்மானங்கள்.. வாரம் ஒரு புது சமையல்!
உங்கள் துணையோடு அன்பாகப் பேசுங்கள். அலுவலகத்தில் உங்கள் நண்பர்களையும் அடிக்கடி மகிழ்வியுங்கள். விஷ்வா எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பணம் நிறைய இருந்தாலும் அவனுடன் நேரம் செலவிட அவன் பெற்றோர் இருப்பதில்லை வீட்டிலிருக்கும் நேரங்களிலும் பெற்றோர் அலுவலக வேலையைச் செய்துக் கொண்டு இருப்பர்.
விஷ்வா படிப்பிலும் விளையாட்டிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றான். அவன் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு அவன் பெற்றோரையும் அழைத்து வருமாறு கூறினர். அவன் தந்தையிடம் கேட்டதற்கு என்னால் வர முடியாது அன்று எனக்கு வேலை இருக்கிறது தாயை அழைத்துப் போ என்றார். தாயோ எனக்கு அன்று முக்கியமான வேலை அலுவலகத்தில் இருக்கிறது என்னால் முடியாது தந்தையை அழைத்துச் செல் என்றாள். இருவரின் வார்த்தைகளையும் கேட்டு விஷ்வா வருத்தமுற்றான்.
இருவரிடமும் சென்று உங்கள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டான். உடனே அவர்கள் ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஏன் கேட்கிறாய் என்றனர். உடனே அவன் தன் அறைக்குச் சென்று மூவாயிரம் ரூபாயைத் தன் பெற்றோரிடம் கொடுத்து இப்போதாவது இருவரும் என் ஆண்டு விழாவிற்கு வரமுடியுமா என்று கேட்டான். பெற்றோர் அவர்கள் செய்கையை நினைத்து வருந்தினர். அவன் ஆண்டு விழாவிற்கு வர சம்மதித்தனர்.
மகிழ்ச்சி ஒன்றே மனிதன் விரும்புவது. நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவரையும் மகிழ்ச்சிப் படு்த்துவதில் ஏற்படும் சந்தோசம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. எனவே எப்பவும் உங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கலகலப்பாய் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியா இருங்க மற்றவர்களையும் குஷிப்படுத்துங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.
English abstract
At all times keep Satisfied and reside thankfully.
Tale first revealed: Tuesday, December 15, 2020, 14:10 [IST]