Motivational Tales
oi-G Uma
உண்மைதான்.. தைரியம் இருந்தால்தான் நாம் சுதந்திரத்தை சுவாசிக்க முடியும்.. சுதந்திரமாக இருந்தால்தானே மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.. தைரியமும், சுதந்திரமும் கூடி வந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்கப் போகிறது சொல்லுங்கள்..
நான் இதை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்.. முதலில் எனக்கு தைரியம் வர வேண்டும். அது வந்து விட்டால்.. அனுபவிக்கத் தேவையான சுதந்திரமும் கைக்கு வந்து விடும்.. பிறகென்ன மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வேண்டியதுதான்.
மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மனம் சிறகடித்துப் பறக்க வேண்டும். ஒரு கூண்டுக்குள் பறவையை அடைத்து அந்த பறவை வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி மிகவும் அளவில்லாதது. மனம் ரிலாக்சாக இருக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும் இடத்தில் நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனோதைரியம் இருந்தால் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் அடங்கிப் போக வேண்டும் என்று அவசியமில்லை. தவறு என்று தெரிந்தால் தட்டிக் கேளுங்கள். சமுதாயத்தில் நடக்கும் அநியாயத்தையும் மனிதநேயத்தோடு தட்டிக் கேளுங்கள்.
எந்நாளையும் பொன்னாளாக்க மகிழ்ச்சியோடு இருங்கள். உங்களைச் சுற்றி இருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். தனிநபர் சுதந்திரத்திற்கு ஒரு வரையறை உண்டு. எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். சுதந்திரமாக இந்த பூமியில் உலா வாருங்கள்.
English abstract
Freedom is the name of the game of the happiness.
Tale first revealed: Saturday, October 31, 2020, 12:35 [IST]