Motivational Tales
oi-Arivalagan ST
நான் ஒரு தென் தமிழகத்தை சேர்ந்தவன். பக்கத்துக்கு மாநிலத்துல வேலை கிடைத்து. ஆபீஸ் போன ஒரு வாரத்துல பக்கத்துக்கு ஆபீஸ்ல வேலை பாக்கிற ஒரு பொண்ணை பாத்தேன். குருட்டு தைரியத்துல ஹை னு சொன்னேன், உடனே அந்த பொண்ணு பயங்கர காரமா முறைச்சுட்டு போயிருச்சு.
அடுத்த சில நாட்கள்ல திரும்ப திரும்ப அந்த பொண்ண பார்த்தாலும் அமைதியா போயிருவேன். ஒரு நாள் அந்த பொண்ணே என்னை பார்த்து ஹை னு சொல்லி சிருச்சுச்சு, எனக்கு பயமா இருந்தாலும் நானும் சிரிச்சு வச்சேன்.அப்படியே நட்பா பழக்கம் ஆச்சு.
நம்ம வாழ்க்கை நல்லா போன தான் ஆண்டவனுக்கு பொறுக்காதே. உடனே ஒரு வில்லனை அனுப்புனாரு. அவ ஆபீஸ்ல கூட வேல பாக்குற அவங்க மாநிலத்தை சேர்ந்தவன் என்னை பார்த்தாலே முறைத்து விட்டு அவன் மொழியில திட்டிவிட்டு போயிடுவான். ஒரு நாள் அந்த பெண்ணிடம் காதலிக்கிறேன் னு அவன் சொல்லி இருக்கான், அத அந்த பொண்ணு என்னிடம் சொல்லி எனக்கு அவனை பிடிக்கவில்லை னு சொல்லிச்சு. இது தான் டைம்னு உன்னக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா னு கேட்டேன் இல்லைனு சொல்லிருச்சு .
அவன் திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணுறான்னு சொல்லிச்சு. அந்த மாநிலத்துக்கு போயி ஒரு வருஷம் கூட ஆகல அந்த மொழியும் தெரியாது .அங்க எங்க ஆபீஸ்ல இருக்க சிலரை தவிர யாரையும் தெரியாது. இருந்தாலும் திரும்பவும் குருட்டு தைரியத்துல அந்த பொண்ணையும் கூட கூப்பிட்டு போயி அவனை எனக்கு தெரிஞ்ச ஆங்கிலத்துல மிரட்டிட்டு வந்துட்டேன்.
மனசுக்குள்ள ஒருவேளை அவன் பயந்துட்டான் நா அவன் அடிமை இல்ல. நாளைக்கு ஆபீஸ்க்கு ஆளுங்கள கூட்டிட்டு வந்தா நான் அவன் அடிமை என்ற வடிவேலு கான்செப்ட்லயே இருந்தேன். நல்ல வேலை அவன் அமைதியாயிட்டான். இது தான் சந்தர்ப்பம்னு உன்ன எனக்கு பிடிச்சிருக்குனு சொன்னேன், உனக்கு பிடிக்கலைன்னா அவனை மாதிரி தொல்லை பண்ண மாட்டேன் என் வழில போயிருவேன்னு சொன்னேன்.
திரும்பவும் ஒரு ரெண்டு நாள் பாக்கல பேசவில்லை. அப்பறம் அடுத்த நாள் (எனக்கு அதுதான் நல்ல நாள்) நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லுச்சு. அப்பறம் என்ன கொஞ்ச நாள் வானத்துல பறந்த மாதிரியே ரெண்டு வருஷம் ரெண்டே நாள் மாதிரி முடிஞ்சிருச்சு. ரெண்டு பேறும் அவங்க அவங்க வீட்டுல சொல்லிட்டோம். அவளோட அப்பா அவங்க வீட்டுக்கு வர சொல்லி பேசுனாரு, ஜாதகம் வாங்கிக்கிட்டாங்க. எங்க வீட்ல வேற மொழி பேசுற பொண்ணனு பயந்தாங்க, நம்ம தான் எதையும் பேசி பேசியே சாதிச்சுருவோம்லனு ரம்பம் போட்டு எங்க வீட்டுல சம்மதம் வாங்கியாச்சு. எங்க வீட்ல இருந்து வந்து அந்த பொண்ண பார்த்து சரினு சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு ஸ்டேப் தான் இருக்கு அதையும் முடிச்சுட்டா வெற்றிதானு நினைத்தேன்.
காதல் மகிழ்ச்சியா…மாயையா…காதலர் தின விழாவில் தெரியும்
வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் நம்ம எதிர் பார்ப்பை நிறைவேற்றாது இல்லையா. இப்போ எல்லா காட்சியும் மாறுது அவங்க அப்பா ஜாதகம் பொருந்தவில்லைனு சொல்லுறாரு. எங்களுக்கு புடிச்சிருக்கிங்கிறதைத் தவிர வேற காரணம் இல்ல. ஜாதகம் ஒத்துவரல, கல்யாணம் ஆனா ஒருத்தவங்க இறந்துருவாங்க னு சொல்லுறாரு. அவங்க அம்மா விஷம் குடிக்கிறாங்க. என்ன சொல்ல எல்லாத்தையும் நேராக சந்திக்கிறப்போ எதுவும் பண்ண முடியல.
நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து பிரியலாம்னு ஒரு முடிவெடுக்குறோம், பிரிஞ்சுடறோம். ரெண்டு பேரோட வாழ்க்கையும் மாறுது, ரெண்டுபேரும் தனி தனியா நல்ல நிலைமைக்கு வரோம். நான் அங்க இருக்க பிடிக்காம இடம் மாறிவிட்டேன்.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த நினைவுகள் எப்பவும் ஒரு மழை காலத்தைப்போல் பசுமையாக இருக்கும்.
“Glad valentines day to all”
நன்றி நீ.
– ஏஜி கிறிஸ்
English abstract
Here’s a Love, like a lovely rain, shared via our reader.
Tale first printed: Thursday, February 11, 2021, 14:13 [IST]