Memes
oi-Jaya Chitra
சென்னை: தீபாவளி முடிந்து விட்டது, ஆனாலும் யார் வீட்டிலும் இன்னமும் பலகாரம் தீர்ந்தபாடில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு வீட்டில் சுட்ட முறுக்கு தான் ஸ்நாக்ஸ் என்பதை வைத்து கலாய்த்து வருகிறார்கள் மீமர்கள்.
முன்பெல்லாம் தீபாவளி என்றால் வீட்டில் விதவிதமான பலகாரங்கள் சுட்டு அக்கம்பக்கத்தாருக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். பெரும் நகரங்களில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள், தீபாவளி போன்ற பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பறந்து விடுகிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் ஆசைஆசையாக சுட்ட பலகாரங்களை எல்லாம் தாங்களே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் நகரத்தார்களுக்கு.
இதனாலேயே அடுத்த ஒரு மாதத்திற்கு கடையில் சென்று ஸ்நாக்ஸ் வேண்டும் என குட்டீஸ் மட்டுமல்ல பெரியவர்களும் கேட்க முடியாது. சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, தயிர் சாதமாக இருந்தாலும் சரி.. எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள முறுக்கு தான் சைட் டிஷ்.
செல்போன் அழைப்பில் வந்த எமன்…கார் மீது பைக் மோதியதில் தந்தை கண் முன்னே மகன் பலி – 3 பேர் படுகாயம்
தீபாவளி வரை போனஸ், ஷாப்பிங் போன்றவற்றை கலாய்த்து தள்ளிய மீமர்களுக்கு, இப்போது மீந்து போன பலகாரங்கள் தான் கான்செப்ட். தீபாவளிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள் மற்றும் திண்டாட்டங்களை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on Diwali snacks.