Memes
oi-Jaya Chitra
சென்னை: கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் ஓடும் தண்ணீர், சென்னை மக்களுக்கு 2015 வெள்ளக் காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்து பயமுறுத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறை ஜாலியாக கழிக்கலாம் என நினைத்தவர்கள் ஆசையை எல்லாம் மழை வந்து கெடுத்து விட்டது. விடுமுறைக்கு வெளியூர் சென்றவர்கள்கூட அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை திரும்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு மழை இங்கு கொட்டி வருகிறது.

மழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. போதாக்குறைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டதும், சென்னை மக்கள் மத்தியில் வெள்ள பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை வெடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இளசுகளும், காயப்போட்ட துணிமணிகள் காயவில்லையே என்ற கவலையில் பெரியவர்களும் என சென்னை வாழ்க்கை நடந்து வருகிறது.
வழக்கம் போலவே மழை பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதோ
சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்கள்…
English abstract
Viral memes assortment on rain
Tale first printed: Sunday, November 7, 2021, 17:52 [IST]