Motivational Tales
oi-G Uma
வாழ்க்கை ஒரு தேன் கூடு போன்றது. எந்தப் பக்கம் தொட்டாலும் தித்திப்புதான்.. அதை முதலில் உணர வேண்டும்.. பின்னர் நுகர வேண்டும்.. கடைசித் துளி வரை அனுபவிக்க வேண்டும்.. அதுதான் சிறந்த வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளம். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.
வாழ்க்கையே வாழத்தானே அதை மகிழ்ச்சியாக உங்களுக்குப் பிடித்தவரோடு வாழுங்கள். நம் வாழ்க்கைப் பாதையின் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்த்தாலே நம் மனதில் மகிழ்ச்சி கிட்டும். எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் அது நம்மிடம் தான் உள்ளது. எப்பொழுதும் புன்னகையோடும் புத்துணர்ச்சியோடும் இருங்கள். முகத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

கனவுகளை நினைத்து அதை அடைய முடியுமா என்று கவலைப்படுவதை விட்டு விட்டு அதை சாதிப்பதற்கு என்ன வழி என கண்டுபிடியுங்கள். முடிந்தவரை நீங்கள் இருக்குமிடத்தில் உள்ளவர்களை கலகலப்பாக்குங்கள். முகத்தில் புன்னகையோடும் மனதில் தெளிவோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம். நமக்குப் பிடித்தவரிடம் இருந்து வரும் புன்னகைக்கும் சக்தி உண்டு. அந்த புன்னகைக் கூட உங்களைச் சாதிக்க தூண்டும்.
என்றும் மகிழ்ச்சியாக இருங்கள். முடிந்தவரை மற்றவர்களையும் சந்தோசப்படுத்துங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியோடு அழகாக்குங்கள். பூக்களின் வாசனையை நுகருங்கள் மழைத்துளியை ரசியுங்கள் வண்டுகளின் ஓசையைக் கேளுங்கள் பறவைகளின் கானங்களை கேளுங்கள். இந்த வாழ்க்கை மீண்டும் ஒரு முறை கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக வாழுங்கள். எங்கும் மகிழ்ச்சி எதிலும் மகிழ்ச்சி.
English abstract
Existence ie so stunning and revel in it to the core.