பிட்ச் அப்படிப்பட்ட கொடூரமான வேகப்பந்து பிட்ச். வங்கதேசம் ஒரு முறை செல்லும் போது நன்றாகச் சென்று வரும்போது ஆம்புலன்ஸ் விமானத்தில் வராத குறைதான்.
இந்த முறை இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டேயில் தொடங்குகிறது. இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் பற்றி கங்குலி கூறும்போது, “முதல் தரக் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அதுவும் பல் ஆண்டுகளாகவே முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார் அய்யர்.
இது சாதாரண வீரரால் செய்ய முடியாதது. ஒரு கட்டத்தில் நம் திறமையை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சென்று காட்ட வேண்டும். அவர் தன் முதல் டெஸ்ட்டில் அருமையாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவருக்கு உண்மையான டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்கள்தான் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பும் பிட்ச்களில் தான் அவர் நிரூபிக்க வேண்டும். நிச்சயம் அவர் நிமிர்ந்து நின்று ஆடுவார் என்றே கருதுகிறேன்” என்றார் கங்குலி.
Also Read: கோலி -ரோகித் சர்மா இருவர் மீதும் தோனி அதிருப்தி அடைந்தார்
ஷ்ரேயஸ் அய்யரின் முதல் தர கிரிக்கெட் சாதனை திகைப்பூட்டக் கூடியது. 54 மேட்ச்களில் 4,591 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 52. 18. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 105 மற்றும் 65 ரன்கள் என்று அசத்தினார் ஷ்ரேயஸ் அய்யர். ஆனால் மும்பையில் 18 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.