ஹைலைட்ஸ்:

  • நடிகை சரண்யா சசி காலமானார்
  • 10 ஆண்டுகளாக மூளை கட்டியுடன் போராடி வந்தார்

கேரளாவை சேர்ந்தவர் நடிகை சரண்யா சசி. அவர் கீரா இயக்கிய பச்சை என்கிற காத்து தமிழ் படத்தில் நடித்தவர். கடந்த 2012ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் கட்டி வந்து கொண்டிருந்தது. அடிக்கடி அறுவை சிகிச்சை செய்து வந்ததால் பண நெருக்கடியில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மே மாதம் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சரண்யா சசி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 35. சரண்யாவின் மரணம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை சீமா நாயர் அண்மையில் தான் சரண்யாவுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். புதுமனை புகுவிழா நிகழ்ச்சி குறித்து அனைவரும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்: காமெடி நடிகரின் மகன், 2 நண்பர்கள் பலி