ஹைலைட்ஸ்:

  • நாய் சேகர் படத்தில் நடிக்கும் வடிவேலு
  • 10 கதைகளில் நடிக்க சம்மதம் தெரிவித்த வடிவேலு

ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் பல காலம் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு, உங்களுக்கு எல்லாம் ஓராண்டாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கோ பத்து வருஷமாகவே லாக்டவுன் தான் என்று கூறி கண் கலங்கினார்.

இந்நிலையில் இம்சை அரசன் பட பிரச்சனையை தீர்க்க முயன்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் முயற்சி தோல்வி அடைந்தது. அதை பார்த்த ரசிகர்களோ, இனி வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியாதா என்று வருத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் நல்ல செய்தி வந்திருக்கிறது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு. அது மட்டும் அல்ல 10 கதைகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனி வரிசையாக வருமாம்.

இனி நீங்கள் என்னை படங்களில் அடிக்கடி பார்க்கலாம் என்று தலைமை செயலகத்திற்கு வந்த வடிவேலு கூறியதன் அர்த்தம் இது தான் போன்று.

எது எப்படியோ, இனி வடிவேலுவை மீம்ஸுகள் தவிர்த்து படங்களிலும் பார்க்கலாம்.

Nayanthara: இவ்ளோ நாள் இருந்துட்டு இப்போ போய் கைவிட்டுட்டீங்களா விக்னேஷ் சிவன்?