உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களை இயக்கியவர் கதிர். இந்தப் படங்கள் அனைத்தும் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் இன்று பலரின் பேவரைட் பாடலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மான், கதிர் கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைய உள்ளனர்.

காதலை மையப்படுத்தி படங்கள் இயக்கும் கதிர், கடைசியாக 2016-ம் ஆண்டு ‘நான் லவ் ட்ராக்’ என்ற கன்னடப் படத்தை இயக்கியிருந்தார். தமிழில் 2002-ம் ‘காதல் வைரஸ்’ படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார் கதிர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் கதிர்.

கதிர் இயக்கும் இந்த படத்தின் நாயகனாக புதுமுகம் கிஷோர் நடிக்கவுள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் பாடல்கள் பதிவுப் பணிகள் தொடங்கவுள்ளன. கதிரின் முந்தைய படங்களை போன்றே இந்தப்படமும் காதலை மையப்படுத்தி உருவாக உள்ளது.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்: உச்சக்கட்ட கோபத்தில் ‘புஷ்பா’ பட தயாரிப்பு நிறுவனம்!
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. தற்போது படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கதிரும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.