Motivational Tales
oi-G Uma
இந்த வருஷத்தில் நம்மில் பலர் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தீர்மானம் இதுதான்.. இதை வருடா வருடம் எடுப்போரும் உண்டு. அதுதாங்க மது, புகை ஆகியவற்றை சுத்தமாக கைவிடுவது என்பதுதான் அது.
நிறையப் பேரால் இதைக் கைவிட முடியாத அளவுக்கு அதில் ஒரு சிக்கல் இருக்கும். ஆனால் மனசு வைத்தால் விட முடியாதது எதுவும் இல்லை என்பார்கள். எனவேதான் இந்த வருடம் நிச்சயம் நீங்கள் இந்தக் கெட்டப் பழக்கத்தை கைவிடுவது என்று தீர்மானம் பண்ணிக்கங்க.. இதனால் கிடைக்கும் பலன்கள் எத்தனை தெரியுமா..

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அவ்வாறு உங்கள் குடும்பமும் இருக்க வேண்டுமென்றால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மது புகை போன்ற பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். தீயபழக்கத்தால் நம் மனதும் உடலும் மிகவும் பாதிப்படைகிறது. தீயப்பழக்கத்தால் நமது செல்வமும் குறைந்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் குறைகிறது.
உங்களுடைய தீயப்பழக்கத்தால் குடும்பத்தினர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். நீங்கள் புகை பிடித்தால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகிலிருப்பவருக்கும் கேன்சர் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இந்தப் புத்தாண்டில் தீயப்பழக்கத்தை விட்டொழிப்போம். நம் குடும்பத்தின் நன்மைக்காகப் பாடுபடுவோம்.
16 வயது சிறுமி.. 600க்கும் மேற்பட்டோர்.. 5 வருடத்திற்கும் மேலாக.. இதுவரை 7 பேர் கைது!
நம்முடைய தீயப்பழக்கத்திற்காகச் செலவு செய்யும் தொகையை நம் பிள்ளைகளுக்காகவோ அல்லது நமது எதிர்காலத் திட்டத்திற்கோ சேமித்து வைக்கலாமே. மது புகை போன்றவற்றை மறப்பது சில நாட்கள் கடினமாக இருப்பினும் அதை அறவே தவிர்த்து புத்தாண்டில் சிறந்த மனிதராய் மாறுவோம். மது புகையை விடுங்க மகிழ்ச்சியோடு இருங்க.
English abstract
New 12 months resolutions are there at all times every time we entered into new 12 months. Here’s any other one answer.