Motivational Tales
oi-G Uma
புத்தாண்டு தீர்மானத்தில் இது நிச்சயம் இருந்தாக வேண்டும்.. ஆமாங்க, வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறையாவது குடும்பத்துடன் எங்காவது போய்ட்டு வாங்க.. அதை விட அற்புதமான பயணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
விடுமுறை நாளில் வீட்டில் இருக்காமல் குடும்பத்தோடு ஜாலியாக ஒரு டூர் சென்று வரலாம். குடும்பத்தோடு ஒரு பயணம் சென்று வந்தால் மனம் குதூகலப்படும். குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களுக்குச் சென்று வர வேண்டும். சுற்றுலாத்தலங்கள் நிறைந்த நம் நாட்டில் வயதாவதற்குள் பொருள் சேர்க்க வேண்டும் தான் அதோடு பல இடங்களையும் விடுமுறை நாளில் சென்று பார்த்து வர வேண்டும்.
உலக அதிசயங்களை நம் வாழ்வில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும். டூர் போவதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளுடன் நன்றாக உறவாட நேரம் கிட்டும். பல இடங்களுக்குச் செல்லும் போது அந்த மக்களின் நிலை அந்த இடத்தின்சிறப்பு ஆகியவற்றை நாம் அறிய இயலும். நம பிள்ளைகளுக்கும் மலைத்தொடரைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் படிப்பதை விட ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதால் அதைப் பற்றி அவர்களால் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும்.
எழில் கொஞ்சம் பூங்காக்கள் விலங்குகளின் சரணாலயங்கள் பனிப்பிரதேசங்கள் போன்றவற்றிற்கு நம் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக ஒரு டூர் போலாமே. வருஷத்தில் பதினோரு மாதம் வேலையில் கவனம் செலுத்துங்க. ஒரு மாதத்தில் பத்து நாட்கள் ஜாலியாக டூர் போகலாமே. ஒரே மாதிரியான வாழ்வு ஒரு கட்டத்தில் போரடித்து விடும். டூர் செல்வதால் மனமும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.
இந்த உலகத்தில் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் எத்தனையோ சுற்றுலாத்தளங்கள் உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு முறை தானே. வேலை மட்டும் தான் வாழ்க்கையல்ல. வருடத்திற்கு ஜாலியாக ஒரு முறை அல்லது இரு முறை டூர் போலாமே. இந்த வருடத்திலிருந்து நானும் டூர் போவேன் இந்த உலகத்தையே ஒரு ரவுண்டு வந்துடுவேன் என்று உறுதிக் கொள்ளுங்கள். ஜாலியா ஒரு டூர் போங்க ஜம்முனு இருங்க.
English abstract
New yr resolutions are there all the time every time we entered into new yr. This is some other one solution.
Tale first revealed: Wednesday, December 30, 2020, 13:55 [IST]