dune280322 2 208

dune280322 2

2022 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் ’டூன்’ என்ற திரைப்படம் 6 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் விழாவில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள விருதுகள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

டூன் திரைப்படம் இதுவரை ஆறு விருதுகளை பெற்றுள்ளது. இந்த படம் 1. சிறந்த எடிட்டிங், 2. சிறந்த இசை, 3. சவுண்ட் எபெக்ட், 4. புரடொக்சன் டிசைன்ஸ், 5. சிறந்த எடிட்டர் மற்றும் 6. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் என ஆறு விருதுகளை வென்றுள்ளது. =சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ’டூன்’ படத்திற்காக கிரேக் ஃபிரேசர் வென்றார், சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ’டூன்’ படத்திற்காக 5 பேர் பெற்றுக்கொண்டனர். மேலும் மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது ’டூன்’ படத்திற்காக 4 பேர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த துணை நடிகர் விருது கோடா படத்தில் நடித்த நடிகர் டிராய் கோட்சர் (Troy Kotsur) பெற்றார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ என்ற திரைப்படம் வென்றது.

சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை ஜப்பான் நாட்டு திரைப்படமான டிரைவ் மை கார் என்ற படம் வென்றுள்ளது.

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி குயின் ஆஃப் பேஸ்கட்பால்’ வென்றது.

dune280322 1

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது க்ரூயல்லா (Cruella) திரைப்படம் வென்றது. இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஜென்னி பீவர் ஆஸ்கர் விருது பெற்றார். இவர் மேட்மேக்ஸ் ஃப்யூரி படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்கர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.