ஹைலைட்ஸ்:

  • வீட்டில் இறந்து கிடந்த நடிகை டகோட்டா ஸ்கை
  • ஜார்ஜ் ஃபிளாய்ட் ஓவியத்தற்கு முன்பு டாப்லெஸ் போஸ் கொடுத்தவர் டகோட்டா

அமெரிக்காவை சேர்ந்தவர் லாரன் கை ஸ்காட். ஆபாச படங்களில் நடித்து வந்தார். அவர் டகோட்டா ஸ்கை என்று அழைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் வீட்டில் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் கணவர் தான் ஸ்கை இறந்தது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

ஸ்கை இறந்ததற்காக காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் ஓவியத்திற்கு முன்பு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார் டகோட்டா ஸ்கை.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சான்டா பார்பராவில் ஹேப்பி ஜார்ஜ் ஃபிளாய்ட் தினம் என்று தெரிவித்திருந்தார் டகோட்டா ஸ்கை.

அந்த போஸ்ட்டை பார்த்த பலரும் டகோட்டாவை கிண்டல் செய்ததுடன், திட்டவும் செய்தார்கள். பரிதாபமாக இறந்த ஒருவரின் ஓவியத்திற்கு முன்பு இப்படி டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்க வெட்கப்பட வேண்டும். இதை போய் பெருமையாக போஸ்ட் போடுகிறீர்களே. இது ஜார்ஜை அவமதிக்கும் செயலாகும் என்று சமூக வலைதளவாசிகள் விளாசினார்கள்.

dakota skye

27 வயதான ஸ்கை இறந்தது குறித்து அவரின் பெரியம்மா லின்டா ஆர்டன் கூறியதாவது,

லாரன் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவருக்கு மதுப்பழக்கம், போதை பழக்கம் இருந்தது. அதற்கு அடிமையாக இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரின் தாய் இறந்தபோது லாரன் போதை மற்றும் மதுவால் கிட்டத்தட்ட மரண வாசலை தொட்டுவிட்டு வந்தார். அவர் குழந்தையாக இருந்தபோது என்னுடன் தான் வசித்து வந்தார். குடும்பத்தை மிகவும் நேசித்தார்.

தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அம்மா, சகோதரர்களுக்காக செலவு செய்தார். அவரை மிகவும் நேசித்த கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றார்.

ஓராண்டுக்குள் டகோட்டாவின் தாத்தா, பாட்டி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். டகோட்டா இறப்பதற்கு முன்பு அவருடன் யார் இருந்தார் என்பது தெரியவில்லை.
ஆசையை சொன்ன சிவகார்த்திகேயன்: வருத்தப்பட்ட ரசிகர்கள்