திருமண சடங்கின் ஒரு பகுதியாக ரித்தேஷ் 8 முறை தன் காலை தொட்டதாக நடிகை ஜெனிலியா சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் கூறினார்.

ஜெனிலியா

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட் சென்ற இடத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

டிவி நிகழ்ச்சி

ஜெனிலியாவும், கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் சூப்பர் டான்ஸர்-சாப்டர் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தன் திருமணத்தின்போது நடந்த சில காமெடி சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெனிலியா. போட்டியாளர் அனீஷ் ஆடியதை பார்த்த ஜெனிலியா, ஓமைகாட், உங்களின் பெர்ஃபாமன்ஸை பார்க்கும்போது என் திருமணம் நினைவுக்கு வருகிறது என்றார்.

திருமணம்

தற்போது திருமணம் கூட மாடர்னாகிவிட்டது. அதுவும் பார்ட்டி போன்று நடக்கிறது. ஆனால் எனக்கு பாரம்பரிய முறையில் நடக்கும் திருமணங்கள் தான் பிடிக்கும். என் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். பிதாய் நிகழ்ச்சியின்போது எமோஷனலாகிவிட்டேன் என்றார் ஜெனிலியா.

ரித்தேஷ்

திருமண சடங்கின்போது ரித்தேஷ் என் காலை எட்டு முறை தொட்டார் என்று ஜெனிலியா தெரிவித்தார். திருமணத்தில் மணப்பெண்ணின் காலை மணமகன் தொட்டாரா என்று ரசிகர்கள் வியந்தார்கள். ஷில்பா ஷெட்டி, கீதா கபூர், அனுராக் பாசு ஆகியோர் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கிறார்கள். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.