சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரீதி, இந்திய ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு எதிராக துல்லியமாகப் பந்துவீசி, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஷாஹீன் அப்ரீதி, உலகம் முழுவதும் கவனம் பெற்றார். அபாயகரமான பந்துவீச்சாளர்கள் லிஸ்டில், இவரது பெயரும் சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மிகமுக்கிய பௌலராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரின் 6ஆவது சீசனில், லாகூர் காலந்தர்ஸ் அணிக்கு ஷாஹீன் அப்ரீதி கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவர் 2018ஆம் ஆண்டில், 21 வயதாக இருக்கும்போதுதான் பிஎஸ்எல் தொடரில் காலந்தர்ஸ் அணிக்கு அறிமுகமானார். இதுவரை 37 போட்டிகளில் 7.65 எகனாமியுடன் 50 விக்கெட்களை வீழ்த்தி, இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சிறப்பாக பந்துவீசி வருந்ததால், கடந்த வருடம் காலந்தர்ஸ் அணிக்கு துணைக் கேப்டனாகவும் இருந்தார். இந்நிலையில், சோஹைல் அக்தரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, அப்ரீதிக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் அகிப் ஜாவத், “நான் இளம் வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஷாஹீன் அப்ரீதிக்கும் நான் பயிற்சியளித்திருக்கிறேன். அவர் மிக விரைவாக தவறுகளைச் சரிசெய்துகொண்டு, சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதற்குமுன், யாரும் இவ்வளவு விரைவாக, மேம்பட்டதை நான் பார்த்ததே இல்லை. கேப்டனாக சிறந்த செயல்பட்டை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.
லாகூர் காலந்தர்ஸ் அணி (2022): ஷாஹீன் அப்ரீதி (கேப்டன்), ரஷித் கான், டேவிட் வைஸ், ஹரிஸ் ரவுஃப், முகமது ஹபீஸ், சோஹைல் அக்தர், ஜீஷன் அஷ்ரஃப், அகமது டேனியல், ஃபக்கர் ஜமான், பில் சால்ட், ஹாரி புரூக், அப்துல்லா ஷபிக், கம்ரான் குலாம், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஜமான் கான், மாஸ் கான், சமித் படேல், சையத் ஃபரிடோன்.