ஆகவே ஆன்ரிச் நார்ட்யே காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு நிம்மதிப் பெருமூச்சே. இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்யேதான். 5 மேட்ச்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றியுள்ளார் இந்த ஆண்டில். அதில் ஒரு இன்னிங்சில் 5/56 என்று அசத்தியுள்ளார்.
டெஸ்ட் தொடரிலிருந்து ஆன்ரிச் நார்ட்யே விலகல்
இவருக்கான மாற்று வீரரே தேவையில்லை ஏனெனில் இவர் போக 7 மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இதனையடுத்து இன்னொரு கொலவெறி வேகப்பந்து வீச்சாளர் வருகிறார் அவர் டுவேன் ஆலிவியர். இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டுக்குச் செல்லும் கோல்பாக் டீலில் இவரும் போய் தற்போது திரும்பியுள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ ஜேன்சன், பியூரென் ஹென்றிக்ஸ், கிளெண்டன் ஸ்டுர்மான், சிசந்தா மகடா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இந்திய பேட்டர்கள் ஆன்ரிச் நார்ட்யேவை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சந்தித்ததில்லை, சந்தித்த பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகளைக் கேட்டால் தெரியும் ஐபிஎல் தொடரில் பார்க்கும் பவுலர் அல்ல அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கொலவெறியுடன் வீசுவார், இது வங்கதேச பேட்ஸ்மென்கள் பேண்டேஜுடன் வந்திறங்கினாகளே அவர்களுக்குத் தெரியும்.
தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:
டீன் எல்கர், பவுமா, குவிண்டன் டி காக், கேகிசோ ரபாடா, ரசீ வான் டெர் டியூசன், பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, கைல் வெரீனி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கி இங்கிடி, டுவேன் ஆலிவியர், கிளெண்டன் ஸ்டர்மேன், பிரணலன் சுப்ரேயன் , சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன்.
Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube