TN vs KAR: ‘நாங்க அடிச்சு பழகிட்டோம்’…நீங்க வாங்கி பழிகிட்டீங்க: கர்நாடகா அணியை பங்கம் செய்த தமிழ்நாடு!
மேலும், இந்த பிட்ச்களில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தொடர்ந்து 150 வேகத்தில் பந்துகளை வீசுவார்கள் என்பதால், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை அதிகம் ஆடி பழக்கப்பட்ட இந்திய அணி படுமோசமாக திணற வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அஸ்வினால் முடியுமா?
இந்திய அணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில்கூட சிறப்பாக பந்துவீசக்கூடியவர். கடந்த ஆகஸ்ட் மாதம், சர்ரே கவுண்டி அணிக்காக இங்கிலாந்தில் விளையாடியபோது, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் அடுத்தடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி மேட்ச் வின்னராக இருந்தார். இதனால், இவரது பந்துவீச்சு தென்னாப்பிரிக்க மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்கர் பேட்டி:
இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டீல் எல்கரிடமும் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எல்கர், “அஸ்வினின் பந்துவீச்சு தென்னாப்பிரிக்க பிட்ச்களில் எடுபடாது என்றுதான் கருதுகிறேன். இந்திய மண்ணில் அவர் சிறப்பாக செயல்பட்டதை வைத்து, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்துவீசுவார் என்று கருதக் கூடாது. தென்னாப்பிரிக்க பிட்ச்கள் அதிகம் சவாலானது. அஸ்வின் சிறந்த ஸ்பின்னர்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்க மண்ணில் காலநிலையை சமாளித்து, அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு நாங்கள் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். எங்கள் திட்டத்தில் முழுக்கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். தனிப்பட்ட எந்த வீரரையும் நம்பி இருக்காமல், ஒட்டுமொத்த அணியாக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணி வலுவானது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அவர்கள் சிறந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
அஸ்வின் இதற்குமுன்பு, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பல மைதானங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இதனால், தென்னாப்பிரிக்க மண்ணிலும் ஆதிக்கம் செலுத்தி, எல்கருக்கு ஷாக் கொடுப்பார் எனக் கருதப்படுகிறது.