பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் வந்தனர். முதல் டி20 போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது.
இது தொடர்பாக மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானுக்கு ேம.இ.தீவுகள் சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சிப்பிரிவில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார்கள்.இந்த 4 பேருமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை இருப்பினும் தொற்று இருக்கிறது. இந்த நால்வரும் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தொடரில் எந்த வித மாற்றமும் இல்லை.
Also Read: 100% சம்பளத்தை இழந்த இங்கிலாந்து வீரர்கள்- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 புள்ளிகளும் காலி
மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் உறுதியானது.கரீபியன் கிரிக்கெட் லீக் தொடங்கும் முன்பாகவே வீரர்கள் பெரும்பாலும் பயோ-பபுள் சூழலுக்குள்தான் இருக்கிறார்கள்.இந்த கரோனா தொற்றால் எங்களின் பாகிஸ்தான் பயணம் பாதிக்கப்படாது. இருப்பினும் 3 வீரர்கள் விளையாடமுடியாதது பெரும் இழப்புதான்” என்று கூறியுள்ளது.
Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube