இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
(தக்கவைப்பு குறித்த முழு விபரம்: ( IPL Retention Live: 8 அணிகள்…யார் யாரை தக்கவைத்துள்ளது தெரியுமா? அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதுதான்! )
இத்தனை வீரர்கள்தான்:
மொத்தம் 8 அணிகள் 27 வீரர்களை தக்கவைத்துள்ளது. கே.எல்.ராகுல், ரஷித் கான், ஷ்ரேயஸ் போன்ற வீரர்களை எந்த அணியுமே தக்கவைக்கவில்லை. மெகா புதிய இரண்டு அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை தக்கவைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதால் ராகுல், ரஷித் கான் போன்ற முக்கிய வீரர்களை இந்த அணி தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா ஏலம்:
இந்நிலையில் மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் பிசிசிஐயிலிருந்து தற்போது கசிந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7,8ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடத்தப்படுமாம். இந்த ஏலத்தை பெங்களூர் நகரத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன், 2018ஆம் ஆண்டில்தான் இரண்டு நாட்கள்வரை ஏலம் நடைபெற்றது.
தாமதம் ஏன்?
புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணி, சூதாட்ட நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முகாந்திரம் இருப்பதால், பிசிசிஐ இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நடைபெற்று முடிய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால்தான், மெகா ஏலத்திற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம்.