இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
(தக்கவைப்பு குறித்த முழு விபரம்: ( IPL Retention Live: 8 அணிகள்…யார் யாரை தக்கவைத்துள்ளது தெரியுமா? அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதுதான்!
மெகா ஏலம்:
இந்நிலையில், மெகா ஏலம் பிப்ரவரி 7,8ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளதால், சிலர் 20 கோடி ரூபாய்வரை ஏலம் போக வாய்ப்புள்ளது.
மற்றொரு ஏலம்:
2018 முதல் 2022ஆம் ஆண்டு வரைக்கும் ஐபிஎலை ஒளிபரப்பு செய்ய ஸ்டார் நிறுவனம், 16,347 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமத்தைப் பெற, அதற்கான ஏலத்தின்போது சில தொலைக்காட்சி நிறுவனங்கள் 40,000 கோடி ரூபாய்வரை செலவு செய்ய தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இது மூன்று மடங்கு அதிகம்தான்.
இந்நிலையில், இந்த தொகையை திரட்டி, ஏலத்தில் பங்கேற்க சோனி நிறுவனமும், ஜூ (ZEE) நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைச் சோனி நிறுவனமும், ஆன்லைன் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ நிறுவனமும் பெறும் வகையில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்டார் நிறுவனம் இவர்களைவிட பெரிய தொகைக்கு ஏலம் கேட்டால் மட்டுமே, ஒளிபரப்பு உரிமத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியும்.