Motivational Tales
oi-G Uma
உங்களைச் செதுக்கும் சிற்பி யார் தெரியுமா.. சாட்சாத் நீங்களேதாங்க.. உங்களை செதுக்கி செம்மையாக்க உங்களை விட சிறந்த சிற்பி வேறு யாரேனும் இருக்க முடியுமா சொல்லுங்க. நிச்சயமா இருக்க முடியாது. ஒவ்வொரு செயலும் நீங்கள் செய்யும் போது அதில் உங்கள் தனித்துவம் தெரிகிறது.
உங்களை அழகிய சிலையாக மாற்றுவதும் கல்லாகவே வைத்திருப்பதும் உங்களால் தான் முடியும். மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. நீங்கள் நினைத்தால் உங்களை சிறந்த நபராக மாற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய வாழ்வின் லட்சியத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். பிடித்த படிப்பை பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் இலக்கினை அடையக் கூடிய பாதைகளை வழிமுறைகளை வகுத்திடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில். தீவிர முயற்சியால் வாழ்வின் இலக்கை அடையுங்கள். மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்கும் இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறலாம். இருக்கும் ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையோடு வாழ்வதும் நம் கையில் தான் இருக்கிறது.
ஒரு குடிசையில் விவசாயி தன் மனைவி ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தான். தன் நிலத்தில் சோளம் நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான். அதில் வந்த லாபத்தில் தன் மனைவியின் மூலம் சிறிய தொழில் ஆரம்பித்தான். வீட்டிலேயே மசால் வகைகள் ஊறுகாய் வகைகள் வடகங்கள் நிலக்கடலை மிட்டாய் பலகாரங்கள் போன்றவற்றைச் செய்து விற்பனை செய்வார்கள். அவன் மகன் படித்துப் பட்டம் பெற்றான். எங்கும் வேலை கிடைக்கவில்லை.
பின் ஒருநாள் தந்தை அவனிடம் உன்னிடம் உலகை மாற்றுவதற்கான சக்தி இருக்கிறது. நீ நினைத்தால் எதுவும் சாதிக்கலாம் வா என்னுடன் என்று வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சாரை சாரையாக செல்லும எறும்புகளைக் காட்டி எத்தனை துன்பம் வந்தாலும் தன் இரையை நோக்கிப் பயணம் செய்கிறது எறும்புகள் அதுபோல நாமும் நம்மை செதுக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
தேர்தலுக்குப் பிறகும்.. இதே “காதலோடு” இருப்பாங்களா.. மோடியும், ராகுலும்?!
வீட்டிற்கு வந்த மகன் தன் தாய் தந்தையரின் தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தான். காலையில் வயல் வேலை பிறகு மசாலா தொழில் என்று பரபரப்பாக வேலை செய்தான். ஆறே மாதத்தில் தன் தந்தையின் பெயரில் ஃபுட் பேக்டரி திறந்துவிட்டான். ஒரு பக்கம் நிலத்தில் காலத்திற்கேற்ப பயிரிடுதல் வீட்டைச் சுற்றிக் காய்கறித் தோட்டம் அதைத் தவிர மசாலா மற்றும் ஊறுகாய் வகைகள் தயாரிப்பதில் புதுமையைப் புகுத்தி வெளிநாடுகளுக்கும ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தான்.
நீங்கள் என்னவாக வேண்டுமென்று முடிவு செய்பவர்கள் நீங்கள் தான். உங்கள் குறிக்கோளை அடைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்.
English abstract
Self motivation is the most productive one at all times to succeed in.