மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் 45 பந்துகளில் ரிஸ்வான் 87 விளாச, பாபர் ஆஸம் 53 பந்துகளில் 79 ரன்கள் விளாச 208 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் மகாவிரட்டலில் கொசு போல் ஊதித்தள்ளியது. முதல் விக்கெட்டுக்காக இருவரும் 158 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 6வது முறையாக இருவரும் சதக்கூட்டணி அமைத்து டி20 கிரிக்கெட்டில் பெஸ்ட் ஓப்பனர்ஸ் ஆக திகழ்கின்றனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இருவரும் சேர்ந்து 197 ரன்களைச் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிடிவி ஸ்போர்ட்ஸில் பேசிய ரஷீத் லடீஃப், “ஓராண்டுக்கு முன்னால் நாம் கூறினோம் நம்மிடம் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போல் வீரர்கள் நம்மிடம் இல்லை என்று கூறினோம், ஆனால் இப்போது சில காலத்தில் இந்தியாவும் கூறும் எங்களிடம் பாபர் ஆசம், ரிஸ்வான் போல் வீரர்கள் இல்லை என்று.
முன்பு கூட இவர்கள் இருவர் மீதும் ரன் எடுக்கும் வேகம் மீது விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் இப்போது இருவரும் ரன் எடுக்கும் வேகமும் உலகத்தில் முன்னிலை வகிக்கிறது.” என்றார் ரஷீத் லடீஃப்.
எப்போதும் இந்திய அணியை ஒரு சுட்டுப்புள்ளியாக வைத்தே பாகிஸ்தான் வீரர்கள் பேசுவார்கள், இது கவாஸ்கர் காலத்திலிருந்தே உண்டு. இங்கு கவாஸ்கர் என்றால் அங்கு மாஜித் கான் என்பார்கள், இங்கு கபில் தேவ் என்றால் அங்கு இம்ரான் கான் என்பார்கள். இங்கு வெங்சர்க்கார் என்றால் அங்கு ஜாவேத் மியாண்டட் என்பார்கள், இங்கு சந்திரசேகர் என்றால் அங்கு அப்துல் காதிர் என்பார்கள் இப்படித்தான், ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு பெரு நிகழ்வு நிகழ்ந்த பிறகே அங்கு கம்பேர் செய்ய முடியவில்லை, இன்சமாம் என்றார்கள் ஆனால் அவர் சச்சின் எட்டிய உச்சத்தை எட்ட முடியவில்லை.
இதையும் படிங்க: யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் 18 வயது தமிழக வீரர் தேர்வு
அதே போல் மிஸ்பா உல் ஹக்கை தோனியுடன் ஒப்பிட்டார்கள், ஆனால் தோனியின் பீக்கிற்கு முன்னால் அதுவும் பிசிபிசுத்துப் போனது, இப்போது விராட் கோலி கொஞ்சம் பின்னடைய பாபர் ஆசம் எழுச்சி பெற்றுள்ளார், அதை வைத்துக் கொண்டு அதிகமாக பிளிறுவார்கள், இது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் வழக்கம்தான்.
Practice @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Practice @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube