இந்த வெண்கலப்போட்டி கிளாசிக் இந்தியா-பாகிஸ்தான் போட்டியாகும். இரு அணிகளுமே கட்டுக்கோப்பாக ஆடவில்லை. நேற்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா தோற்றிருக்கும், எப்படியோ ஜெயித்தது என்றுதான் கூற வேண்டும். இடைவேளையின் போது இந்தியா 1-2 என்று பின் தங்கியிருந்த நிலையில் கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் 2 கோல்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால் 4-2 என்று முன்னிலை பெற்ற பிறகு இந்திய அணி ரிலாக்ஸாக ஆடத் தொடங்கியது, பாகிஸ்தான் அணி எப்போதுமே கடைசி நிமிடங்களில் மூச்சைப்பிடித்துக் கொண்டு ஆடுவார்கள், இதில் ஒரு கோலை போட்டு 4-3 என்று நெருக்கினர். கடைசியில் பாகிஸ்தான் போட்ட நெருக்கடியில் ஃபவுல் செய்து 9 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது.
மேலும் பயிற்சியாளர் கிரகாம் ரீட் இந்தத் தொடருக்கு ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட முன்னிலை வீரர்களுக்கு ஓய்வு அளித்து 2 ஆண்டுகள் ஆடாத மற்ற வீரர்களை அணியில் தேர்வு செய்ததும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லாததற்குக் காரணம். இங்கு இப்படி என்றால் பாகிஸ்தான் ஹாக்கி முறையாக பயிற்சி கூட செய்ய முடியாத நிதி நெருக்கடியில் சிக்கி இந்தத் தொடருக்கு வந்தது. தென் கொரியா அணியும் ஒலிம்பிக்கிற்குப் பிறகு எந்த ஒரு அர்த்தமுள்ள ஹாக்கி தொடரிலும் ஆடவில்லை.
ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஜப்பான் அணியும் தன் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தது, ஆனால் இப்படியிருந்தும் இந்தத் தொடரில் இந்தியா ஜப்பானிடம் 5-3 என்று உதை வாங்கி கடைசியில் வெண்கலம் வென்றது. தென் கொரியாவுடன் டிரா செய்தது, பாகிஸ்தானை இருமுறை வீழ்த்தினாலும் ஆட்டத்தில் ஒரு சொரத்து இல்லை. ஒலிம்பிக் வெண்கலப் போட்டி போல் அரக்கப் பரக்க இல்லை.
Also Read: புரோ கபடி லீக் 2021-22- பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ‘டை’
வலுவான மலேசியா அணி கோவிட் காய்ச்சல் கட்டுப்பாடுகளினால் பங்கேற்கவில்லை, ஆனால் நிச்சயம் ஹாங்சூவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி தொடரில் பங்கேற்கும் அப்போது இந்திய அணிக்கு மேலும் சிக்கல்தான். 2022ம் ஆண்டு இந்திய ஹாக்கிக்கு ஒரு கடுமையான ஷெட்யூல் காத்திருக்கிறது, ஆகவே பாகிஸ்தானை வென்ற மகிழ்ச்சியோடு நிற்காமல் ஜப்பான் பி அணியிடம் தோல்வி தழுவியதையும் தென் கொரியாவிடம் 0-2 என்று முன்னிலை பெற்று ஆட்டத்தை டிரா செய்ததும், சரியாகப் பயிற்சி கூட இல்லாத பாகிஸ்தானிடம் சொதப்பி வெற்றி பெறுவதும் இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியே.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube